சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இன்று புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) -ஐ எதிர்த்து மேலும் ஒரு வழக்கு பதிவு

        புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று கொண்ட தனி நீதிபதி அவர்கள் வழக்கின் முக்கியவத்தை கருதி தனி நீதிபதி அவர்கள் இந்த வழக்கு மற்ற வழக்குகளுடன் சேர்த்து, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளார்.இதையடுத்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஒருங்கிணைத்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வருகிறது.


           இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்களின் முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஏற்கெனவே 2012ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.ஏங்கெல்ஸ் என்பவர் ஒரு வழக்கும், இதையடுத்து வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த 34 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  34 ஆசிரியர்கள் தொடுக்கப்பட்ட வழக்கு  உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து இந்த வழக்கை மறுசீராய்வு செய்ய  கோரி மனு தாக்கல் செய்து தற்பொழுது நிலுவையில் உள்ளது.