வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Click here to download -1528 Eligible Primary headmasters list

1988 ஜூன் 1க்கு முன்தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்குஇடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்துதலைமை ஆசிரியர் பதவியில்,தேர்வுநிலைசிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால்,
1988 ஜூன்1க்குபிறகு, 1995 டிச., 31 வரைபதவி
உயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை. இதையடுத்து,தமிழக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்த, 63 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டும்இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்துதலைமைஆசிரியர் பதவியில்,தேர்வுநிலைசிறப்புநிலை வழங்க உத்தரவிடப்பட்டது. இதை பின்பற்றி, 1,528 பேர் மீண்டும் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கும்,வழக்கு தொடுக்காதவர்களுக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்துதலைமைஆசிரியர் பதவியில்,தேர்வுநிலைசிறப்புநிலை வழங்கவும்பணப்பலன் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. இதற்காகஅரசுக்கு பல கோடி ரூபாய் தேவைப்பட்டதால்அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில்வழக்கு தொடுத்த 1,528 பேருக்கு மட்டும்,தேர்வு நிலைசிறப்பு நிலை மற்றும் பணப்பலன் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.