பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கு நன்றி

CLICK HERE-PART-TIME TEACHERS ASSOCIATION LETTER
தற்போது அரசால் அறிவிக்கப்பட்டு இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் பகுதிநேர தொகுப்பூதிய
வேலைசெய்பவர்களுக்கும் 30 சதவீத ஊதிய உயர்வினை, இதய தெய்வம் அமரர் முன்னால் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் 2012ல் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட 16549 பகுதிநேர ஆசிரியர்கள் வரவேற்கிறோம். ஆரம்பத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டாலும், மாண்புமிகு அம்மா அவர்கள் 2014ல் ரூ.2000 ஊதிய உயர்வை முன்தேதியிட்டு நிலுவைத்தொகையுடன் வழங்கினார்கள்.மேலும் தற்போதைய முதல்வர் அவர்களாலும் சென்ற மாதம் செப்டம்பர் 2017ல் ரூ.700 ஊதிய உயர்வை வழங்கப்பட்டுள்ளது.அதனால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் தற்போது ரூ.7700 தொகுப்பூதியமாக பெற்று பலனடைந்து வருகிறார்கள்.

ஜாக்டோஜியோ போராட்டங்களின்போது அரசின் உத்தரவை ஏற்று பள்ளிகளை இயக்க பகுதிநேர ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்துவருகிறார்கள் என்பதனை அரசின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஏழாவது ஊதிய மாற்றுக்குழுவில் டேக்டோ சார்பில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அனைத்து வேலைநாட்களிலும் பணிவழங்கி சிறப்பு காலமுறை ஊதியம் கேட்கப்பட்டது.இருப்பினும் தற்போது அரசு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியதை இருகரம்கூப்பி வரவேற்று அனைவரும் நன்றியினை ஒருமனதாக இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியில் தொடரும் தமிழக அரசுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியினை பணிவுடன் வணங்கி தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
 தங்கள் உண்மையுள்ள,
 சி.செந்தில்குமார்,

 மாநில ஒருங்கிணைப்பாளர் பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு, டேக்டடோ உயர்மட்டக்குழு உறுப்பினர்.