பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பிளஸ் 2 விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செப்டம்பரில், பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கோரி
விண்ணப்பித்தனர். அவர்கள், இன்று பிற்பகல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். பின், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு, அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின், இரு நகல்கள்எடுக்க வேண்டும். அவற்றை, வரும், 15ம் தேதி காலை, 10:00 மணி முதல், 17ம் தேதி மாலை, 5:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில்,கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.