இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் 21000 பேரின் கல்விச் சான்றுகள் தலைமைச் செயலகத்தில் வைத்து கல்வித்துறை அமைச்சர்,கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்...


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப் படாவிட்டால் விரைவில் மிகப் பெரிய போராட்டம் சென்னையில் நடைபெறும்:இராபர்ட்
பேட்டி..

திருச்சி,நவம்பர்,12: 2009&TET ஊதிய போராட்டக் குழுவின் சார்பில் மாநில அளவிலான,மாவட்ட , ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சி ஸ்ரீநிவாஸ் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது... 

கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில செயலாளர் இராபர்ட்  பேசியதாவது:இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் 21000 பேரின் கல்விச் சான்றுகள் தலைமைச் செயலகத்தில் வைத்து கல்வித்துறை அமைச்சர்,கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்...மேலும் எங்களது போராட்டமானது பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கா வண்ணம் விடுமுறை நாட்களில் சென்னையில் வைத்து விரைவில்  மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்..கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

கடந்த 8 ஆண்டுகளாக 2009க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஆறாவது ஊதியக் குழுவில் ஊதிய முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டனர்.அதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்..கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை DPI வளாகத்தில் எட்டு நாட்கள் உண்ணாவிரதம் நடைபெற்றது...போராட்டத்தின் முடிவில் ஏழாவது ஊதியக்குழுவில் 2009 க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற உத்தரவாதத்தின் படி உண்ணாவிரதம் பெறப்பட்டது..ஆனால் தற்போது அரசு அறிவித்துள்ள ஏழாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமானது  மத்திய அரசில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர் களின் ஊதியத்தை வழங்கி வருகிறது...ஒரே கல்வி தகுதி ஒரே பணி என்று அனைத்து தகுதிகளும் ஒரே மாதிரி இருக்கும் போது 1.6.2009 க்குப் பின் ,முன் என்று இரு வேறுபட்ட ஊதியத்தை வழங்கி வருகிறது..அவர்களுக்கும் எங்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் 11,000 வேறுபாடு உள்ளது..

சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்...இனியும் தமிழக அரசு தொடர்ந்து ஆசிரியர்களை ஏமாற்றம் செய்தால் மீண்டும்  2009 க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தகுதித்தேர்வு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து கடுமையான போராட்ட களத்தில. இறங்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்குகிறது...எனவே அரசு எழுத்துப் பூர்வமாக கொடுத்த  உத்ரவாதத்தை விரைந்து போர்க்கால் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

கூட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒன்றியத்திற்கு மூன்று,நான்கு பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.. கூட்டத்தில் மாநில தலைவர்ரெக்ஸ் ஆனந்தகுமார்,மாநில பொருளாளர் கண்ணன்,மாநில துணைத் தலைவர் ஞானசேகரன்,மாநில துணைச் செயலாளர் வேல்முருகன்