சென்னையில் 9 பள்ளிகள், காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/schools-be-re-opened-today-300952.html

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை தத்தளித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டது.

ஒரு வாரம் கழித்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னையில் புரசைவாக்கம், தி.நகர், ராயபுரம், வேப்பேரி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 9 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகளை தவிர பிற பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர பிற பள்ளிகள் இன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார் கலெக்டர்.