தேவையென்றால் பள்ளி நிர்வாகமே விடுமுறை விடலாம் : முதன்மை கல்வி அதிகாரி!!!

சென்னை : வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில்
பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல பகுதிகளில் மழைநீர் வடியத்துவங்கியதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னையில் 9 பள்ளிகள், திருவள்ளூரில் 12 பள்ளிகள், காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இன்று திறக்கப்படுவதாக மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்நிலையில், மழைப்பொழிவை பொறுத்து வேளச்சேரி பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம். தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.