ஆஹா வந்தாச்சு: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக
எதிர்பார்க்கப்பட்ட, அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் அம்சம் (Delete for
Everyone) தற்போது வெளியாகியுள்ளது

இந்தச் செயலியினை ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆப்பிளின் ..எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் ஒரு தனி நபருக்கோ அல்லது குரூப்புக்கோ தவறாக அனுப்பிய மெசேஜ்களை இதன்மூலம் Delete செய்து கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த மெசேஜ் அனுப்புபவர் வாட்ஸ்அப்பின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் GIF, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ், லொகேஷன், காண்டாக்ட்ஸ் ஆகியவற்றை உடனடியாக அழித்துக் கொள்ள முடியும்.

இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது?

 
வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்க, அந்த மெசேஜை Long Press செய்ய வேண்டும். அப்போது ‘Delete For Me’, ‘Delete For Everyone’ என்ற Option உங்கள் முன் தோன்றும்.
. அதில் ‘Delete For Everyone’ Option- Click செய்யும்போது குறிப்பிட்ட மெசேஜ் அழிக்கப்பட்டு, வாட்ஸ்அப் சார்பில் ஃபேக் காப்பி மெசேஜ் மட்டுமே அனுப்புநருக்குச் சென்றடையும். ஆனால் Broadcast பட்டியலில் அனுப்பப்பட்ட மெசேஜ்களை அழிக்க முடியாது.


மெசேஜ் அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் மட்டுமே இந்த வழிமுறையைப் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் சிம்பயான் Operating System கொண்டு இயங்கும் சாதனங்களில் வேலை செய்யாது.