இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு விசாரணை விபரம்

*இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) அன்று வந்தது.
  *விசாரணையின் போது, நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி குறித்து விரிவாக விளக்கினார்.*


*நீதியரசர் நான்கு வாரத்திற்குள் அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.*

*பின்னரும் நமது வழக்கறிஞர் வாதத்தைத் தொடர்ந்தார்.*

*மீண்டும் மூன்று வாரத்திற்குள்ளாக அரசு பதில் அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.*


*நமது தரப்பில் மறுப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 2016ல் அரசு வழங்கிய எழுத்துப்பூர்வ உத்தரவாத கடிதத்தை சுட்டிக்காட்டினார்.*


நீதியரசரிடம் நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை புரிந்து கொண்டார்.....


*நீதியரசர் அரசு தரப்பைப் பார்த்து, "ஒரே பதவிக்கு" 1.6.2009 முன்பு ஒரு ஊதியம் பின்பு ஒரு ஊதியம் என எப்படி இருவேறு ஊதியம் வழங்கப்படுகிறது எனக் கேட்டார்.*


*அரசு தரப்பில் பதில் ஏதுமில்லை.*

*நமது தரப்பில் அரசாணை எண்--303 படி மூன்று மாத காலத்தில் விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்துவிட்டு...*

*பின்னர் அரசு நிதித்துறை கடிதம் மூலமாக 20 ம் தேதிக்குள் விருப்பம் அளிக்க கட்டாயப்படுத்துகிறது எனக் கூறப்பட்டது.*


*நீதியரசர் உடனடியாக அரசு தரப்பில் நாளை மறுதினமே பதில் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.*

*நாளை மறுதினம் (10.11.2017) மீண்டும் விசாரணை தொடரும்.....*


*இடைநிலை ஆசிரியர்களுக்கு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....*