கலைஞருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

திமுக தலைவர் கலைஞரை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில்
பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

சென்னையில் நடைபெறும் தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை சந்திக்க சென்றார். இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் பிரதமர் மோடியுடன் கோபாலபுரம் வருகை தந்தனர்.
 

கோபாலபுரம் வந்த அவர்களை மு..ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கலைஞரை சந்தித்து பிரதமர் மோடி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஒய்வெடுக்க வருமாறு கலைஞருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.