ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் ??எப்போது வரும்???

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகளான மதிப்புமிகு சசிதரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார். ( உயர் நீதிமன்ற விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிபதிகள் இடமாறுதல்) மற்றும் நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தற்போதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கினை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. நீதியரசர் திரு.ஜி.ஆர்.சவாமி நாதன் சென்னை நீதிமன்றத்திற்கு வரும் தேதி தெரிந்தவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் அநேகமாக இந்த வார இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஜாக்டோ ஜியோவின் மூத்த வழக்கறிஞர் அவர்கள் வழக்கை விரைந்து கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன்