நேர்மை #அதிகாரி-திரு.உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)


 

மக்களே அக்கறை கொண்ட அரிய வகை அதிகாரி. ``டென்டர் நேரத்தில் இவர் இருந்தால், எதுவுமே செய்ய முடியாது. இவரை மாற்றிவிடுங்கள்’’ என ஊழல் அரசியல்வாதிகளை அலறவைத்த துணிச்சல்காரர். பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக, பழைய மோசடிகளைத் தோண்டி எடுத்து முறைகேடுகளைக் களைந்து `பளிச்என மாற்றிய மிஸ்டர் க்ளீன். இவரை மாற்றப்போகிறார்கள் என்கிற வதந்திக்கே நெட்டிசன்கள் இணைந்து ஹேஷ்டேக் உருவாக்கி ஆதரவுக் குரல்கொடுத்ததே உதயச்சந்திரனின் நேர்மை
சொல்லும் நிகழ்காலப்பதிவு. பத்தாம்வகுப்பு மற்றும் ப்ளஸ்டூ தேர்வில் குதிரைப்பந்தய ரேங்க் முறையை ஒழித்தது, பள்ளிப்பாடத் திட்டங்களில் நவீன மாற்றங்களைப் புகுத்தியது, நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி மையங்கள் அறிவிப்பு, பல ஆண்டுகளுக்குப் பிறகு நூலகங்களுக்குப் புதிதாக நூல்களை வாங்கியது என உதயச்சந்திரன் எடுத்ததெல்லாம் அவசிய மாற்றங்கள்!

வெல்லும் அறம்


வாழ்த்துக்கள் அய்யா....