மீண்டும் மிரளவைக்கும் வகையில் அதிரடி விலை குறைப்பை வாரி வழங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ!

2016-ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு துறையில் இலவச வாய்ஸ் கால், அதிவேக இலவச டேட்டாவை அறிமுகம் செய்து  வாடிக்கையாளர்களை தன்
பக்கம் கவர்ந்திழுத்த ஜியோ குறுகிய காலத்தில் ஜியோ பெருவளர்ச்சி கண்டது.

ஜியோ அடுத்தடுத்து வழங்கி வரும் அதிரடி சலுகை திட்டங்களை எதிர்கொள்ள வழிதெரியாமல் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் 8 திட்டங்களில் அதிரடி விலை குறைப்பு மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

1. ரூ.199 - ரூ.149 திட்டம்: இந்த திட்டத்தில் இதுவரை ரூ.199-ல் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.149-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2. ரூ.399 - ரூ.349 திட்டம்: இந்த திட்டத்தில் இதுவரை ரூ.399-ல் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இதன் விலை தற்போது ரூ.349-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

3. ரூ.459 - ரூ.399 திட்டம்: இதுவரை ரூ.459 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இதன் விலை தற்போது ரூ.399-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

4. ரூ.499 - ரூ.449 திட்டம்: இந்த திட்டத்தில் இதுவரை ரூ.499 திட்டத்தில் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இதன் விலை தற்போது ரூ.449ஆக குறைக்கப்பட்டுள்ளது.

5. ரூ.198 திட்டம்: இந்த திட்டத்தில் இதுவரை ரூ.198-ல் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

6. ரூ.398 திட்டம்: இந்த திட்டத்தில் இதுவரை ரூ.398-ல் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

7. ரூ.448 திட்டம்: இந்த திட்டத்தில் இதுவரை ரூ.448-ல் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

8. ரூ.498 திட்டம்: இதுவரை ரூ.498-ல் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டது. இனி நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

இந்த புதியதாக மேம்படுத்தப்பட்ட திட்டங்களின் சலுகைகள் அனைத்து, நாளை செவ்வாய்கிழமை (ஜன.9) முதல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


தொலைத் தொடர்பு சேவையில் தனது மேலாதிக்கத்தை செலுத்தி வாடிக்கையாளர்களிடம் அடாவடி கட்டண வேட்டையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடிவாளம் போடும் விதமாக சலுகைகளை வாரி வழங்கி வருகிறது ஜியோ