வளர்ந்த நாடுகளில் கணினிக் கல்விக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் தரவதற்கான காரணம்…”

பல வளர்ந்த நாடுகள் அவற்றின் அரசு பள்ளிகளுக்கு கணினி பயன்பாடுகளையும், உயர்தர தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு
வசதிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. சிறந்த தொழில்நுட்ப கல்வியானது மாணவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கைத்திறன் மிகுந்தவர்களாகவும் இருக்க உதவுகின்றது.

 
அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தொழில்நுட்பங்கள், விளையாட்டுக்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் இன்று  உலகில் முன்னணி நாடுகளாகவும், வளர்ந்த நாடுகளாகவும் திகழ்கின்றன. உயர்தரமான தொழில்நுட்ப கருவிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தரமான முறையில் வழங்குவதால் அந்த நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இவ்வாறான அதிநவீன வளர்ச்சியினால் Google, Microsoft, Facebook  போன்றவற்றை உருவாக்கியவர்கள் அந்த நாடுகளில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்தியாவில் இதுபோன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை இதுவரை உருவாக்க முடியவில்லையேஏன்..??

வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் முன்முயற்சி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஒரு வாய்ப்புக் கூட வழங்காமல் வேலையில்லா ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளது. உயர் சம்பளம் தேவையில்லை; வாய்ப்பு மட்டும் தாருங்கள்; பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியருக்கு மட்டும்.

திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014