ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்ததில் இருந்து

சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால், மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், வருமான இழப்பை தவிர்க்கவும் சலுகைகளை வழங்குகிறது.
இதன் காரணமாக புதிய சலுகை அல்லது திருத்தங்களுடன் பழைய சலுகை என சலுகை அற்விப்புகள் அதிக அளவில் வெளியாகின்றன. அந்த வகையில் ஜியோ குடியரசு தினத்தை முன்னிட்டு விலை குறைப்பு + அதிக சலுகைகளை வழங்கியுள்ளது.
# ரூ.98-க்கு வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
# ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 திட்டங்களில் முறையே 42 ஜிபி, 105 ஜிபி, 126 ஜிபி மற்றும் 136 ஜிபி டேட்டா ஆகியவை முறையே 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

# ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்களில் முறையே 56 ஜிபி, 140 ஜிபி, 168 ஜிபி மற்றும் 182 ஜிபி டேட்டா ஆகியவை முறையே 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.