கால நீட்டிப்பிலேயே காலம் தள்ளும் வல்லுநர் குழு*

*5 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட வல்லுநர் குழு 6வது முறையாக கடந்த
04.01.2018 அன்று மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.*

*கடந்த இரண்டு முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டது குறித்த அரசாணை அரசு இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.*

*வல்லுநர்குழு கடந்த 22.9.2016 க்கு பிறகு எந்தவொரு அரசு ஊழியர் சங்கத்தையோ அல்லது ஆசிரியர் சங்கத்தையோ சந்தித்ததாக தகவல் இல்லை.*

*காலநீட்டிப்பிற்குரிய காரணத்தைத் தெரிவிக்கவில்லை.*

*நீதிமன்றத்தில் 2017 நவம்பர் 30க்குள் அறிக்கை பெறப்படும் என்ற அரசின் உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படவில்லை.*

*ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே இதற்கான தீர்வு.*


திண்டுக்கல் எங்கெல்ஸ்.