ஏர்செல் முக்கிய அறிவிப்பு..!வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளுமாறு Aircel வேண்டுகோள் விடுத்துள்ளது.


சேவையில் நாளை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கூடிய விரைவில் மாறிக் கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனமே தெரிவித்துள்ளது.
திவாலானது ஏர்செல் நிறுவனம்

எஸ்பிஐ,பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளில் பெற்ற ரூ.15,500 கோடி கடனை திரும்ப செலுத்த முடியாததால் திவாலான
நிறுவனமாக அறிவிக்க கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் கோரிக்கை வைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளுமாறு Aircel வேண்டுகோள் விடுத்துள்ளது.

சேவையில் நாளை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கூடிய விரைவில் மாறிக் கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனமே தெரிவித்துள்ளது.

செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன.
இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது. பின்னர் ஏர்செல் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் பெரு நகரங்களில் உள்ள 75% டவர்கள் தற்காலிகமாக செயல்படத் தொடங்கினாலும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண டவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால்,பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் செல்போன் டவர்கள் முடங்கும் வாய்ப்பு உள்ளதாக ஏர்செல் தென்மண்டல தலைவர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் சிக்னல் மீண்டும் நாளை முதல் கிடைக்காது என்பதால், வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு உடனடியாக மாறிக் கொள்ளலாம் என்றும் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

எனவே நாளை முதல் ஏர்செல் டவர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.