பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிகளுக்குப் புறம்பாக பணி ஆணை வழங்குவதில் நடந்த முறைகேட்டில்,
தற்காலிக பணி ஆணை திடீரென
முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் நிரந்தர பணிமாறுதல் ஆணை வழங்கிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறவழியில் உயிர் துறக்கும் வரை தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர் செல்வக்குமாரிடம் பேசினோம்., " கடந்த 2017 மே மாதம் நடைபெற்ற கலந்தாய்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இது தொடர்பாக தொடக்ககல்வி துறைக்கு
பல மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கபட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 4 முறை புகார் மனு அளித்தோம். அந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டு மனுதாரர்களின் கோரிக்கையை விரைந்து செயல்படுத்தும் படி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் செல்வகுமார் மற்றும் ஆசிரியை சாந்தா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.