தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக
சத்யபிரதா சாஹு நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு பதில் நியமனம் செய்யபப்ட்டுள்ளார். சத்யபிரதா சாஹு
1997 தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் . சத்யபிரதா சாஹு தற்போது சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் தமிழக அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர்.
தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள ராஜேஷ் லக்கானிக்கு வேறொரு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.