மின்னணு மயமாகும் PF கணக்குகள் - காகிதமில்லா பரிமாற்றத்திற்கு மாற ஆகஸ்ட் 15 வரை கெடு!!!


*பிராவிடன்ட் ஃபன்ட் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகள் மற்றும் பரிமாற்றங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்
முழுமையாக மின்னணு மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*இதுதொடர்பாக தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து பி.எப் (P.F) அலுவலகங்களும் காகிதமில்லாப் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பி.எப் உறுப்பினர்களின் ஆதார் எண் சரிபார்த்தல், அனைத்துக் கோப்புகளையும் மின்னணு வடிவில் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.