மொபைல் எண் - ஆதார் இணைப்பு சரிபார்ப்பு!!!


மொபைல் எண்கள் சம்பந்தப்பட்ட நபர்களின்
ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார்
ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆபரேட்டர்களும், ஏஜெண்ட்களும், புதிய சிம் கார்டு வழங்குவதிலும், மொபைல் எண் மறுபரிசோதனையின் போதிலும் அந்த மொபைல் எண்ணுக்குச் சொந்தமானவரின் ஆதார் விவரங்களுக்குப் பதிலாக வேறு விவரங்களைப் பயன்படுத்தியதை ஆதார் ஆணையம் சமீபத்தில் கண்டறிந்தது. இதனால் மொபைல் எண் - ஆதார் இணைப்பு விதிமுறைகளை ஆதார் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. மேலும், சில்லறை விற்பனையாளர்கள், ஏஜெண்ட்கள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடாமல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும், மொபைல் சந்தாதார்கள் தங்களது மொபைல் எண்ணானது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் எஸ்எம்எஸ் வாயிலாகத் தகவல் தரும் வசதியை ஏற்படுத்தித் தரும்படி ஆதார் ஆணையம் தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆதார் - மொபைல் எண் இணைப்பில் இதுவரையில், செயல்பாட்டிலிருக்கும் 142.9 கோடி மொபைல் எண்களில் சுமார் 85.7 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணைய அதிகாரி ஒருவர் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்