பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு


தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் 2005ல் தேசிய கட்டட விதிகளின் படி பள்ளியில் கட்டிடங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது