தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!


பள்ளிக்கல்வித்துறை கல்வி முறைகளில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில்,10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தன. இத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதிகளை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 16-5-2018 அன்றும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 30-5-2018 அன்றும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 23-5-2018 அன்றும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.