ஏன் மத்தியரசின் ஆறாவது ஊதியக்குழுவில் ஊதியக்குழுவிற்கு முன் ஊதியக்குழுவிற்கு பின் தமிழகத்தில் ஏற்பட்டது போல் பாதிப்பு ஏற்ப்படவில்லை...?


மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 6வது ஊதிய மாற்றத்தை 1.1.2006 முன் தேதியிட்டு 29.8.2008ல் அரசாணை வெளியிட்டு அமல்படுத்தியது.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது போல் மத்திய அரசில் 29.8.2008 க்கு முன்
நியமனம் பெற்றவர்கள், 29.8.2008க்கு பின் நியமனம் பெற்றவர்கள் என்ற ஊதிய முரண்பாடு உள்ளதா?

இல்லையே.
மத்திய அரசின் 6 வது அரசாணையின் பத்தி 8 படியுங்கள் புரியும். ஒவ்வொரு ஊதிய விகித்திற்கும் entry level pay எவ்வளவு என்பதை தனி அட்டவணையாக வெளியிட்டுள்ளதையும் பாருங்கள்.

தமிழ்நாடு அரசின் அரசாணை 234ல் Entry level pay அட்டவணை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊதிய விகிதங்களை பின்பற்றிய தமிழக அரசு அதனை முழுமையாக பின்பற்றியிருந்தால் இவ்வளவு ஊதிய முரண்பாடு ஏற்பட்டிருக்காது. ஆகவே மறைக்கப்பட்ட entry level pay அட்டவணையை 1.1.2006 முதல் அமுல்படுத்தி அதன் அடிப்படையில் 7 வது ஊதிய மாற்றத்தை திருத்தியமைத்தால் தமிழ்நாட்டில் 1.1.2006, 1.6.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறுவர். இத்தடன் மத்திய அரசின் 6வது ஊதியக்குழு அரசாணை பக்கங்களை இணைத்துள்ளேன். படித்து பாருங்கள் .

ஜாக்டோ ஜியோவில் இக்கோரிக்கையை இணைத்திட மாநில பொறுப்பாளர்கள் முயற்சிக்க வேண்டும்...
(நன்றி தோழர் குமார் கட்செவி பதிவு)

இங்கு மாற்றப்பட வேண்டியது
தர ஊதியம் மாற்றமே...

விமர்சனக்காற்று வீசட்டும்.
வெளிச்சத்தில் உண்மைகள்
மிளிரட்டும்!

பொதுவாழ்வில் ஓர்இயக்கத்தின் செயல்பாடுகளில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை.

இன்னும் சொல்லப்போனால், இத்தகைய விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

இந்த விமர்சனங்களே நமது பலம், பலவீனம் ஆகியவற்றை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

விமர்சனங்களைக் கண்டு முகம்சுழிப்பதோ,ஆத்திரம் கொள்வதோ எந்தப் பயனையும் தராது.

நேர்மையான விமர்சனங்கள்
நமது பலத்தை மேலும்
வளர்த்துக்கொள்ளவும்,
நமது பலவீனங்களைக்
களைந்துகொள்ளவும்
உதவுகின்றன.

_செ.நடேசன்.
முன்னாள் பொதுச்செயலாளர்
TNPTF...

No automatic alt text available.

Image may contain: text


No automatic alt text available.


No automatic alt text available.