"அரசுப்பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது"- வைரலாகும் அரசுப்பள்ளி மாணவனின் பேச்சு


நான் சுமார் நான்கு மாதத்திற்கு முன் பஸ் அடிக்கடி வராத சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கும் சமயம் 8ஆம் வகுப்பு
அரசுப்பள்ளி சீருடை அணிந்தமணவன் ஒருவன் லிப்ட் கேட்டான். நான் போகும் வழியிலே 10 கிமீ அவனது வீடும் இருந்ததால் அவனை ஏற்றிக்கொண்டு அவனிடம் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் (எனக்கு தெரிந்தவரை) பற்றி விசாரித்தேன். ஆனால் அவன் அவரைப்பற்றி எனக்கு தெரியாது, இப்போது வேறு ஒருவர் இருக்கிறார் என்றான்.

உடன் நான் சென்ற வருடம்வரை அவர்தானே இருந்தார் 8ம் வகுப்பு படிக்கும் உனக்கு எப்படி அவர் தெரியாமல் இருக்கும் எனக்கேட்டேன்..??

அதற்கு அனது பதில்தான் என்னை இந்த பதிவையே தொகுக்க வைத்தது...!

*இனி ஆங்கிலமும் தமிழும் கலந்த பதில் அவனது வார்த்தையிலே:*

Sir, நான் last year வரைக்கும் School (சுமாராக பீஸ் வாங்கும் தனியார் பள்ளி) தான் படிச்சேன். என் Father ஒரு Private company contract labour Work செஞ்சிட்டு இருந்தாரு, அப்போ எங்க Fatherக்கு Salary ஜாஸ்தியா இருந்துச்சி. ஆன இப்ப BHEL order குறைஞ்சி போய் அவங்க Companyக்கும் Contract சரியா கிடைக்கல. எங்க அப்பாவுக்கும் Income கொறஞ்சிபோச்சி. அதுனால அந்த அளவு Fees கட்டமுடியாம, அந்த Scool Continue பண்ணமுடியல..!

*அதுனால நான் இப்ப அதுக்கு பக்கத்து Government school English medium படிச்சிட்டு இருக்கேண்ணே."*

அதற்குள் நான் இடைமறித்து,  'என்னப்பா சொல்லுற நீ...!! ஏற்கனவே நீ படிச்ச உங்க ஸ்கூல்ல படிக்கும் பசங்க,  நீ இப்ப படிக்கும்  ஸ்கூலப்பத்தியும் அங்க படிக்கும் பசங்களைப்பத்தியும் கேவலமா பாப்பீங்களே என்று எனக்கு தெரிந்த  நிலவரத்தை கேட்டேன்..!

அதற்கான அவனது பதில்: