10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்


இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும், பள்ளியின் -மெயில் முகவரிக்கு நேரடியாக மதிப்பெண் பட்டியலை அனுப்பவும்
திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார் . இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.