ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் முதல்நிலை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு


..எஸ்., .பி.எஸ். முதல் நிலை தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது என்று சிவில் சர்வீசஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.

..எஸ்., .பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை மத்திய அரசின் தேர்வாணையம்(யு.பி.எஸ்..) வருடந்தோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற 3 வகையான தேர்வுகளை நடத்துகிறது.

அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி இந்தியா முழுவதும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது. இதற் கான ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில் ( www.upsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து யு.பி.எஸ்.. ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்படாது. ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு முன்பே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது. ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம் சரியாக தெரியவில்லை என்றால் ஆதார் அட்டையோ, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், 2 புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும்.

காலை தேர்வு 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.20 மணிக்கு தேர்வு அறைக்கு மாணவர்கள் வரவேண்டும். இதே போல தேர்வு மதியமும் நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மாணவர்கள் 2.20 மணிக்கு வரவேண்டும்.

மாணவர்கள் தேர்வுக்கான உரிய நேரத்தில் வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு மையத்திற்கு மாணவர்களை அனுமதிக்க முடியாது.

ஹால்டிக்கெட்டில் போடப்பட்டு இருக்கும் இடத்தில் தான் தேர்வை எழுதவேண்டும். வேறு எந்த இடத்திலும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது.

தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை கொண்டுவரவேண்டும். அதைக்கொண்டுதான் .எம்.ஆர். ஷீட்டை நிரப்பவேண்டும்.

தேர்வில் வினாக்கள் தொடர்பான கருத்துகளை ஜூன் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை http://upsc-o-n-l-i-ne.nic.in /mis-c-e-l-l-a-n-eous/QP-r-ep/ என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம்.

செல்போன்(சுவிட்ச் ஆப் செய்தாலும்), கேமரா, ஸ்மார்ட் கைக்கெடிகாரம், பேஜர், புளுடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்பொருட்களும் தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தேர்வு அறைக்கு பைகள் அனுமதி கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது