அரியானாவில் ஆண்களுக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு


மனைவியின் பிரசவ காலத்தின் போது பிறக்கும் குழந்தையை பராமரிப்பதற்காகஅரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களுக்கும், 15 நாட்கள் விடுப்பு வழங்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.
போலீஸ், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் மனோகர் லால் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி, மின்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக 13,000 வழக்குகள் கோர்ட்டில்நிலுவையில் உள்ளன. இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.பெண்களைப் போன்று, ஆண் அரசு ஊழியர்களுக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது. காவல் துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.

 கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது தங்களின் வலிமையை காட்டுவதற்கான சரியான பாதை இல்லை. ஆனால் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு எப்படி, என்ன செய்ய போகிறார்கள் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.அரியானா மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறையை மாற்றி, மேம்படுத்த அரசு பணியாற்றி வருகிறது என்றார்.