ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு - அடுத்த மாதம் வெளியாகிறது!.


*ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் வடிவமைக்கப்பட்டு

, மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.*

*இந்த புதிய 100 ரூபாய் தாள் பழைய 100 ரூபாய் தாளைவிட சிறியதாகவும், புதியதாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் தாளை விட சற்று பெரியதாகவும் இருக்கும்.*

*இதில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.*

*புற ஊதாகதிர் வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க வகையில் புதிய 100 ரூபாய் தாளில் பல சிறப்பம்சங்களைச் சேர்த்துள்ளனர்.*

*புதிய 100 ரூபாய் தாள் வெளியானாலும் பழைய 100 ரூபாய் தாள்கள் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*