12-ம் வகுப்பில் "Skill Training" என்ற புதிய பாடம் இடம்பெறும்: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


பிளஸ் டூவில் ஸ்கில் டிரெய்னிங் (திறன் வளர்ப்பு பயிற்சி) என்ற புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி காந்தி மார்கெட் அருகே அரசுப் பள்ளி கூடுதல் கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்தந்த பகுதியில் உள்ள தொழில்களை மனதில் கொண்டு புதிய பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டில் சேர்க்கப்படும் என்றார்.
 புதிய பாடத்திட்டத்துக்கான பயிற்சி, ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்றும் 5 கட்டமாக ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்க நிரந்தர விலக்கு வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை முடிவு என்றும் இந்த கொள்ளை முடிவில் இருந்து அரசு பின்வாங்காது என்றும் கூறினார். 412 மையங்களில் சுமார் 80 லட்சம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார்.