2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இருக்காது


இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது
என்ற உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்..,
தெரிவித்துள்ளது.

தனியார் சி.பி.எஸ்.., பள்ளிகளில் என்.சி..ஆர்.டி., தரும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்தக்கோரி வழக்கு தொடப்பட்டது.
இதுகுறித்த விசாரணையின் போது, சி.பி.எஸ்.., பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.., உத்திரவாதம் அளித்தது. தொடர்ந்து இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்தது.