மதுரை:அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், ஆங்கில வழி பிரிவுகளை விரிவுபடுத்த கோரி
தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
ஒத்திவைத்தது.
இதனால், கட்டணம் இன்றி, ஏழை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்படிச் செய்தால், 'நீட்' உட்பட போட்டித் தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள முடியும்.உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும், உபரி ஆசிரியர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும் உதவும்.
உதவி
பெறும் பள்ளிகளில், ஆங்கிலவழி பிரிவுகளை ஏற்படுத்தக் கோரி, பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.நீதிபதிகள், சி.டி.செல்வம், ஆர்.தாரணி அமர்வு, மனு மீதான விசாரணையை, இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.