மெட்ரிக் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி கட்டாயம்


'புதிய பாடத்திட்ட பயிற்சியில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என,பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1
வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பல புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய பாடத்திட்டத்தில் உள்ள, 'பார்கோடு, க்யூ.ஆர்.கோடு, வீடியோ' உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு, நவீன முறையில் பாடம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், வகுப்பு வாரியாக, பாட வாரியாக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி துவங்கியுள்ளது.

சென்னையில், 9ம் வகுப்புக்கு, நாளை பயிற்சி நடக்கிறது. எஸ்.பி..., மற்றும் பி.என்.தவான் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடக்கிறது. 'இதில், அனைத்துமெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்று, பயிற்சி பெற வேண்டும்' என, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, திருவளர்செல்வி சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.