பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளுக்கு ரஜினி பாராட்டு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நன்றி!


பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு அத்துறையின் அமைச்சர் கே..செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “காமராஜர்
பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வித் துறையில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே..செங்கோட்டை யன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார்எனத் தெரிவித்திருந்தார்.