ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி


அடுத்த ஆண்டு பிப்ரவரி 3 முதல் 17ம் தேதிக்குள் முதற்கட்ட நீர் தேர்வு நடைபெறும்

இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே 12 முதல் 26ம் தேதிக்குள் நடத்தப்படும்

டெல்லியில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளை மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில் NEET, JEE Main, UGC Main, G-MAT, G-PAT, G-Main உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் 8 அமர்வுகள் மூலம் தேர்வு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்

மேலும் இனி நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே என ஆண்டுக்கு இரண்டுமுறை நடத்தப்படும் என்றும் கூறினார். JEE main தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்

2 கட்டங்களாக நடைபெறுவதால் மொத்தமாக தேர்வு எழுதுவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயிற்சிகள் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும் என்று தெரிவித்தார்

2 முறை தேர்வு எழுதினாலும் அதில் சிறந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் ஏதேனும் ஒரு தேர்வை மாணவர்கள் தேர்ந்தெடுத்து எழுதலாம் எனவும் கூறியுள்ளார்

தேர்வுகள் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும், பாடத்திட்டம் மற்றும் தேர்வு கட்டணத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார்

அடுத்த ஆண்டு பிப்ரவரி 3 முதல் 17ம் தேதிக்குள் முதற்கட்ட நீர் தேர்வு நடைபெறும், முதற்கட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே 12 முதல் 26ம் தேதிக்குள் நடத்தப்படும், விருப்பமுள்ள தேதியை மாணவர்கள் தேர்வு செய்து எழுதலாம் என்றும் மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வு நடத்துவதில் சிரமம் இல்லை என்றும் கூறியுள்ளார்