மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(BIET), ஆரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (GTTI)ஆகியவற்றில், தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு 2018-19 -ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஜூன் 18 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை இணையதளத்தில்
(www.tnscert.org)விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு 821 பேர்
விண்ணப்பித்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களில் 713 தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 413 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை அரசு ஆய்வு செய்ததில், கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தினால், இப்பள்ளிகளில் கற்றல் விளைவுகள் மேம்பட வாய்ப்புள்ளது என முடிவெடுக்கப்பட்டது.
எனவே,
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு முடித்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பமுள்ளவர்கள் இரண்டாண்டு (D.EI.Ed- Diploma in Elementary
Education) பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள முகவரியில்(www.tnscert.org) ஜூலை 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது