ஐந்து கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு- அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 25-ம் தேதி
தொடங்கி 5 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு என ஏற்படுத்தப்பட்ட மையங்களில் சென்று மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

முதற்கட்டமாக 190 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் முதல் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் இன்று முதல் 24-ம் தேதி வரை ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.

இதேபோல் 175 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு வரும் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த மாணவர்கள் வரும் 25-ம் தேதி முதல் கட்டணம் செலுத்தலாம்.

150 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும். வரும் 30-ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம். இதேபோல் 125 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் 13ம் தேதி வரையில் கலந்தாய்வு நடக்கிறது. இவர்கள் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம். இதர மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14 முதல் 19-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் கட்டணம் செலுத்தலாம்.

கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்