உடனடி PAN NUMBER திட்டம்!


புதிதாக பான் கார்டு பெற விரும்பும் தனி
நபர்களுக்கு, ஆதார் எண் அடிப்படையில், இணையம் வாயிலாக, உடனடியாக பான் எண் ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை, வருமான வரித்துறை துவக்கி உள்ளது. வருமான வரித்துறை, சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு விபரம்

ஆதார் எண் வைத்துள்ள, தகுதி உள்ள தனி நபர்களுக்கு, இணையம் வாயிலாக, உடனடியாக, ' - பான்' எண் ஒதுக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' அடிப்படையில், குறுகிய காலத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது