ஆசிரியர்கள் அனைவரும் EMIS இணையத்தில் தங்களுடைய விவரங்களை சரிசெய்வது மிக முக்கியம் - EMIS TEAM

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்

 

 

இனிவரும் காலங்களில் EMIS ல் SMS, email , OTP சேவை போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பல முக்கிய தகவல்கள் SMS மற்றும் email மூலமாக அனுப்பப்படும். எனவே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், தலைமையாசிரியரும்,  BRTE யும் பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் அவர்களின் email முகவரி மற்றும் mobile எண் விவரங்கள் EMIS ல் சரியானவையா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

1. ஆசிரியரின் 8 இலக்க EMIS ID & Password பயன்படுத்தி EMIS இல் Login செய்க.


2. My Profile ல்  email முகவரி மற்றும் mobile எண்ணைப் புதுப்பிக்கவும்.


குறிப்பு :

 

ஆசிரியர்கள் அவரவர் individual profile ல் email and phone no. சரியாக update செய்வதை உறுதி செய்வது தனிப்பட்ட ஆசிரியரின் பொறுப்பாகும். email id  அல்லது mobile எண் தவறாக இருந்தால், ஆசிரியர் முக்கியமான தகவல்களை  இழக்க நேரிடும்.

  

Mobile எண்  மாற்றம் செய்தாலும் password ல் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.

 

ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக் கிழமைக்குள் இப்பணியினை முடிக்குமாறு அனைத்து ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.